காருக்குள் கிருமிகளா? வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்!
பொதுவாக கார்களை சுத்தப்படுத்தும்போது காரின் உள்பக்கம் கிருமிகளை அழிப்பதற்காக இரசாயனம் கலந்த ஸ்பிரேயரை பயன்படுத்துவோம். இந்நிலையில் காருக்குள் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை அழிக்க இரசாயனம் இல்லாத புதிய தொழில்நுட்பத்தை மலேசிய நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
அந்நாட்டைச் சேர்ந்த மெட்கின் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய தொழில்நுட்பம் செராஃபியூஷன் என அழைக்கப்படுகிறது. பொதுவாக பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காற்றில் உள்ள நேர்மறை அயன் மூலமே சுவாசிக்கின்றன. செராஃபியூஷன் தொழில்நுட்பம் மூலம் காற்றில் எதிர்மறை ஆக்ஸிஜன் அணுக்கள் வெளியிடப்படுகிறது.

அது காற்றை சமநிலைக்கு கொண்டுவந்து ஓசோன் வாயுவை வெளியிடும். இதனால் காற்று முழுமையாக சுத்தமடையும். இந்தத் தொழில்நுட்பம் முதலில் எம்.ஜி. மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மெட்க்லின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இனி வரவிருக்கும் ஹெக்டர் மற்றும் ZS EV புதிய மாடல்களில் செராஃபியூஷன் தொழில்நுட்பத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை காரில் உள்ள ஹீட்டர், வென்ட்டிலேட்டர், ஏசி சிஸ்டத்தின் மூலமாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
You must log in to post a comment.