காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக் கழகம் அமைந்த நாள்

முனைவர் டி.எஸ். சௌந்தரம் மற்றும் முனைவர் சி.ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து இந்நிறுவனத்தை உருவாக்கினர். காந்திகிராம கிராமிய உயர் கல்வி நிறுவனம் 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் அறிவு மற்றும் வேலை ஆகியவை தனித்தனியானவை அல்ல என்று குறிப்பிடும் ஒரு கொள்கையில் அமைந்த சர்வோதயக் கல்வி முறையைத் தொடர்வதற்காக இதை அவர்கள் உருவாக்கினர்.

புதுதில்லியைச் சேர்ந்த பல்கலைக்கழக மானியக் குழு அதன் மூன்றாவது சட்டப் பிரிவு 1956 இன் கீழ் 1976 ஆம் ஆண்டு காந்திகிராம கிராமப்புற பல்கலைக்கழகத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என அறிவித்தது. இதன்படி 1976 ஆம் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் நாள் மத்திய அரசால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு பல்கலைக்கழகமாக காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் மாறியது. இப்பல்கலைக் கழகம் பல்கலைக்கழக மானியக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி இப்பல்கலைக் கழகம் காந்திகிராம கிராமிய நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வாழ்க்கை முழுவதும் கல்வி’ என்ற புரட்சிகரமான காந்தியக் கல்வியின் அடிப்படை தனி மனிதர்களைச் சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவது என்பதை மையமாகக் கொண்ட சர்வோதய கல்வி முறையை காந்திகிராம கிராமப்புற நிறுவனம் கல்வித் திட்டங்களை உருவாக்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் காந்திகிராமத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஊரக வளர்ச்சி, ஊரகப் பொருளாதாரம் மற்றும் விரிவாக்கக் கல்வி, கிராமப்புறம் சார்ந்த அறிவியல், ஒத்துழைப்பு, மேம்பாட்டு நிர்வாகம், கிராமிய சமூகவியல் போன்ற பாடப் பொருள்களை மையமாக வைத்து தமிழ் மற்றும் இந்திய மொழிகள், ஆங்கிலம் மற்றும் சில வெளிநாட்டு மொழிகள் போன்றவற்றில் புதிய கல்வித் திட்டங்களை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சிறப்பு நாள்

நைஜர் – விடுதலை நாள் (1960)
வெனிசுவேலா – கொடி நாள்

பிற நிகழ்வுகள்

435 – கான்ஸ்டண்டீனபோலின் ஆயர் நெஸ்டோரியஸ் (நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர்) பைசண்டைன் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாட்டுக்கு கடத்தப்பட்டார்.
1492 – கொலம்பஸ் ஸ்பெயினில் இருந்து புறப்பட்டார்.
1492 – ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கத்தோலிக்கர்களால் வெளியேற்றப்பட்டனர்.
1645 – முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியில் ஆலர்ஹைம் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் புனித ரோமப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றன.
1678 – அமெரிக்காவின் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் ரொபேர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது.
1783 – ஜப்பானில் அசாமா மலை வெடித்ததில் 35,000 பேர் கொல்லப்பட்டனர்.
1860 – நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் தொடங்கியது.
1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது.
1916 – ஐரிய தேசியவாதி சேர் ரொஜர் கேஸ்மெண்ட் ஈஸ்டர் எழுச்சியில் அவரின் பங்களிப்புகளுக்காக லண்டனில் தூக்கிலிடப்பட்டார்.
1934 – அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் பெரும் தலைவரானார்.
1949 – தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
1960 – நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1975 – மொரோக்கோவில் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் கொல்லப்பட்டனர்.
1976 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.