கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 4 பேர் பலி

தூத்துக்குடி, ஜூலை 2: தூத்துக்குடி,செக்காரக்குடி பகுதியில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி செக்காரக்குடி பகுதியில் வியாழக்கிழமை கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, தொட்டிக்குள் இருந்து விஷவாயு வெளிப்பட்டுள்ளது. இதில் 4 தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டன. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.