கர்நாடக மாநிலத்துக்குள் 31 வரை அவசரத் தேவைக்கு மட்டுமே தமிழக மக்கள் செல்ல முடியும்


கர்நாடக மாநிலத்துக்குள் வரும் 31-ஆம் தேதி வரை தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அவசரத் தேவைக்கு வரும் சூழலில் மட்டுமே அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போது நாடு முழுவதும் 4-ஆவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கர்நாடக அரசு அமைச்சரவை கூட்டத்தை திங்கள்கிழமை கூட்டியது. அக்கூட்டத்தில் ஒருசில முடிவுகள் எடுக்கப்பட்டன.

அந்த முடிவுகளில் ஒன்று, வரும் 31-ஆம் தேதி வரை மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, கேரளா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு அனுமதியில்லை. அவசர தேவை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதுதான்.
காரணம் கடந்த 3-ஆம் தேதிக்கு பிறகு மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கர்நாடகாவில் நோய்த் தொற்றின் பாதிப்பு அதிகரித்தது. இது மாநில சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக அமைந்தது. இதன் காரணமாகவே இந்த மாநிலங்களில் இருந்து வருவோரை மே 31 வரை அனுமதிக்க வேண்டாம். அதே நேரத்தில் அவசியத் தேவைகளுக்கு வருவோரை அனுமதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.


மாநிலத்தில் உள்ள மால்கள், பப்களுக்கு அனுமதியில்லை. ஓட்டல்களில் பார்சல்கள் மட்டும் அனுமதிக்கப்படும். அமர்ந்து சாப்பிடும் வசதிக்கு தொடர்ந்து தடை நீடிக்கும். சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்படும்.
ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். நோய்த் தொற்றுக்காக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லை. பேருந்து பயணத்தின்போது பணப்பரிமாற்றத்தை குறைத்துக் கொள்ளும் வகையில் QR கோட் ஸ்கேனிங் முறை அறிமுகம் செய்வது, பேருந்துகளை தினமும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுபபது உள்ளிட்ட பிற முக்கிய முடிவுகளும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.