கர்நாடக இசைக் கலைஞர் அன்னமாச்சாரியர் பிறந்த நாள்

1408 – கர்நாடக இசைக் கலைஞர் அன்னமாச்சாரியார் பிறந்த நாள்
1502 – கொலம்பஸ் புதிய உலகுக்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) ஸ்பெயினில் இருந்து தொடங்கினார்.
1866 – கோபாலகிருஷ்ண கோகலே இந்திய சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள்
1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி (omnibus) மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1919 – இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.
1920 – போலந்து ராணுவம் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றிய வெற்றி நிகழ்வு கிரெசாட்டிக் நகரில் நடைபெற்றது.
1927 – கன்பராவில் ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது.
1933 – மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.
1936 – எத்தியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆப்பிரிக்கா என்ற நாடு உருவாக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போரில் டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை ஜெர்மனிய யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.
1941 – இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் கடற்படையினர் தாக்கிக் கைப்பற்றினர்.
1942 – இரண்டாம் உலகப் போரில் உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.
1945 – இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.
1956 – உலகின் 8-ஆவது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சியை முதன்முதலாக ஜப்பானிய மலையேறுவோரால் எட்டப்பட்டது.
1980 – புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
1985 – காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1987 – போலந்து பயணிகள் விமானம் வார்சாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 183 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – ரஷ்யாவில் காஸ்பீஸ்க் என்ற இடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.