கரோனா பாதிப்பு: டெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதி

மும்பை: கரோனா வைரஸ் பரவுதலை அடுத்து பாதிக்கப்படும் ஏழைகளுக்கு உதவுவதற்காக கிரிக்கெட் வீர்ர் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களால் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்க வேண்டும் என பாரத பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் அளிக்கும் நிதி பேரிடர் மேலாண்மைக்கும், ஆராய்ச்சிக்கும் பயன்படும்.

PM CARES என்ற பெயரில் நிதி பெறுவதற்குரிய வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. Pmindia.gov.in என்னும் இணையதளத்தில் பொதுமக்கள் நிதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி ரூ.50 லட்சம் மதிப்பில் அரிசி வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். எம்.பியும், இந்திய கிரிக்கெட் அணியின்

முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான கவுதம் கம்பீர் தில்லியில் கரோனாவால் பாதித்தோருக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு தனது தொகுதி நிதியில் இருந்து ரு.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.  அதேபோல் இந்திய மல்யுத்த வீர்ரும், ரயில்வே அதிகாரியாகவும் பணிபுரியும் பஜ்ரங் பூனியா தனது 6 மாத ஊதியத்தை பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தற்போது நிதியுதவி வழங்கிய விளையாட்டு வீர்ர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரும் இடம்பெற்றுள்ளார். அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். ரூ.25 லட்சம் மராட்டிய முதல்வர் நிவாரண நிதிக்கும், ரூ.25 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும் அவர் வழங்கியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.