ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் – கரோனாவின் எதிரியாக ஆனது எப்படி!

பனாமா நாட்டின் ஒரிடத்தில் உள்ள சிறிய நீர்வழிப்பாதை இரு அமெரிக்க கண்டங்களுக்கிடையேயான கடல்களை இணைக்கிறது. இப்பாதையில் மிகப் பெரிய கப்பல்கள் செல்லமுடியாத நிலை இருந்தது. இந்நிலையில் சுமார் 82 கி.மீட்டர் தூரத்துக்கு நீர்வழிப்பாதையை அகலப்படுத்த வேண்டிய சூழல் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பகுதியை அகலப்படுத்தும் பணி 1881-இல் தொடங்கியது. இப்பணி தொடங்கி சில மாதங்களில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் இறக்கும் நிலை ஏற்பட்டது நோய்வாய்ப்பட்டு இறந்த அவர்களின் மரணத்துக்கு எது காரணம் என்பது அப்போது தெரியவில்லை. இதனால் அப்பணி பாதியில் கைவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1904-இல் அமெரிக்கா இப்பணியை செய்ய முற்பட்டது. இந்த காலக்கட்டத்தில் ஏற்கெனவே இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு கொசுக் கடிதான் காரணம். மலேரியா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அமெரிக்கா மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்தது.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் குளிர் காய்ச்சலுக்கு பயன்படுத்திய சின்கோனா மரப்பட்டையில் இருநது கிடைக்கும் குயினைன்தான் அந்த மருந்து. பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட குளிர் காய்ச்சல் மலேரியாவால் ஏற்பட்டது என்பதும் அப்போதுதான் தெரியவந்தது. இப்போது இந்த காய்ச்சலுக்கு பயன்பாட்டில் இருக்கும், தயாரிக்கப்படும் மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துக்கு அடிப்படையாக இருப்பது குயினைன்தான்.
அதே ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை கொரோனா தாக்குதலுக்கு ஆளான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிலருக்கு மருத்துவர்கள் கொடுத்து பார்த்ததில் அவர்களுக்கு நல்ல பலனை தந்தது. இந்த மருந்துடன் அசித்ரோமைசினும் சேர்த்து அளிக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் கடந்த மார்ச் 20-ஆம் தேதி வெளியானது. இதையடுத்தே இந்த மருந்து கொரோனா பரவிய நாடுகளுக்கு அதிக அளவில் தற்போது தேவைப்படுகிறது.
நுண்ணுயிரியான கொரோனா வைரஸ் மனிதனின் மூக்கு, காது, கண் வழியாக உடலுக்குள் செல்கிறது. பிற மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதரின் மேல் தொற்றிக்கொள்ளும் இந்த வைரஸ் பரவல் மிக வித்தியாசமானது.

வைரஸ் முதலில் மூக்கு, கண், காதுகள் வழியாக தோலின் மேற்புற செல்லில் இருக்கும் ஆண்டெனா போன்ற அமைப்புடன் காணப்படும் ஏசிஇ2 ரிசப்டர் எனப்படும் புரதத்தை பற்றிக்கொள்கிறது. பின்னர் வைரஸ் சுரக்கும் ஒருவித திரவம் ரிசப்டரின் கட்டமைப்பை குலைக்கிறது. அப்போது செல்லின் கட்டமைப்பு உருக்குலைந்ததும் உள்ளே சென்று பல மடங்காக கொரோனா பெருகுகிறது.
இன்குபேட்டர் காலம் எனப்படும் இரு வார காலத்தில் இந்த வைரஸ் உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களுக்குள் மிக வேகமாக பரவுகிறது. செல் சுவர்களை சேதப்படுத்தும் அமிலத்தன்மை கொண்ட கொரோனா வைரஸின் தாக்கத்தை ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சிதைக்கிறது. இதனால் கொரோனா வைரலஸ் செல்சுவர்களை கடக்க முடியாமல் இறந்துபோகிறது.
கொரோனா வைரஸ் செல் சுவர்களை சிதைக்க உருவாக்கும் அமிலத்தன்மை கொண்ட திரவத்தை நீர்த்துப்போகச் செய்யும் ஆற்றல் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தில் உள்ள காரத்தன்மைக்கு இருப்பதைத்தான் தற்போதைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

கொரோனாவுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத இக்கட்டான சூழலில் இந்த மருந்து ஒரு வரப்பிரசாதமாக கிடைத்த தற்காலிகத் தீர்வாக அமைந்துள்ளது.
இன்றைக்கு உலகில் பல இடங்களில் கொரோனாவுக்கு எதிரான மருந்துகளைக் கண்டறியும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அவற்றின் இறுதி முடிவுகள் வரும் வரை ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தான் கொரோனாவை கொல்லும் போர்ப்படை தளபதியாக இருக்கும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.