கமலுடன் இணைகிறார் விஜய் சேதுபதி


“தலைவன் இருக்கிறான்” படத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் நிலையில், அப்படத்தில் விஜய் சேதுபதி கமலுடன் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இப்படம் அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படத் தயாரிப்பு தடைப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மீண்டும் இப்படம் தொடர்பான தகவலை கமல் வெளியிட்டார். கதையம்சம் அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அப்போது பேசப்பட்டது.
இதற்கிடையில் கமல்ஹாசன் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் சென்னை அருகே நடந்த அதன் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தடைப்பட்டது.
அண்மையில் நடந்த நேர்காணலின்போது, தேவர் மகனின் அடுத்த பாகம் எடுக்கவுள்ளதாகவும், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கப்போவதாகவும் கமல் கூறியிருந்தார்.
இந்த படத்தின் முதல் பகுதியில் இருந்த வடிவேலு மற்றும் ரேவதி போன்ற நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் பேசப்படுகிறது.
தற்போது கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிகர் நாசரின் மகன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.