கமரூன் தேசிய நாள்

இன்றைய சிறப்பு

கமரூன் – தேசிய நாள்.
கிழக்குத் தீமோர் – விடுதலை நாள்


முக்கிய நிகழ்வுகள்:


526 – சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3 லட்சம் பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1498 – போர்த்துக்கீச மாலுமி வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.
1570 – உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.
1605 – ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
1631 – ஜெர்மனியின் மாக்டெபூர்க் நகரை புனித ரோமப் பேரரசு கைப்பற்றி நகர மக்களில் பெரும்பான்மையோரைப் படுகொலை செய்தது.
1813 – நெப்போலியன் போனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜெர்மனியின் சாக்சனி நகரில் நுழைந்து ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.
1873 – லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.
1882 – ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முத்தரப்புக் கூட்டணியை ஏற்படுத்தின.
1891 – தாமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.
1894 – காஞ்சி காமகோடி பீடம், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த நாள்.
1902 – ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது.
1949 – குவோமிங்தான் அரசு தாய்வானில் இராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
1965 – எகிப்தில் கெய்ரோ நகரில் பாகிஸ்தான் விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக 60 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
1983 – எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதன்முறையாக வெளியிடப்பட்டன.
1995 – கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக பெரும்பான்மையானோர் வாக்களித்தனர்.
1999 – புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.
2002 – கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.