கண்ணுக்குத் தெரியாத போரை இந்தியா வெற்றி கொள்ளும்

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்


புதுதில்லி, ஏப்.20: கண்ணுக்குத் தெரியாத கொவைட்-19-க்கு எதிரான போரில் இந்தியா வெற்றிகொள்ளும் என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளது:
கொவைட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக நாம் தொடுத்திருப்பது, பல பத்தாண்டுகளில் நடந்திராத கண்ணுக்கு தெரியாத மிகப்பெரிய போர். இதை அனைத்து அமைப்புகளுடனும், மக்கள் ஆதரவுடனும் ஒருங்கிணைந்து நாடு எதிர்கொள்கிறது.
பிரதமர் அலுவலகம், சுகாதார அமைச்சகம் மற்றும் தங்கள் சொந்த மருத்துவ அமைப்புகள் விடுத்துள்ள அறிவிக்கையை ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் கண்டிப்புடன் பின்பற்றி வருகின்றன. இது, நாட்டின் சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போரில், தகவல் தொடர்பில், விநியோக மேலாண்மையில், மருத்துவத்தில் பாதுகாப்பு படைகள் உதவுகின்றன. முன்னணி பாதுகாப்புத்துறை நிறுவனங்கள், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தட்டுப்பாடு நிலவுகிற செயற்கை சுவாச கருவிகளையும், மருத்துவ ரீதியிலான முக கவசங்களையும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கான பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களையும் தயாரித்து அளிக்குமாறு கோரி இருக்கிறோம்.
ராணுவத்தின் செயல்பாட்டை கொரோனா வைரஸ் பரவல் பாதித்துள்ளதா என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர் எத்தகைய சூழலையும் இந்திய ராணுவம் எதிர்கொள்ள தயாராகவே உள்ளது என்றார்.
கடந்த இரு வாரமாக காஷ்மீர் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் நடந்து வந்துள்ள நடவடிக்கைகளை நீங்கள் பார்த்து வந்திருக்கிறீர்கள். உளவுத்துறை தகவல்கள் அடிப்படையிலான தாக்குதல்கள் மூலம், நாம் எதிரிகள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறோம். இந்திய மண்ணின்மீது எதிரிகள் கால் வைப்பதற்கு முன்பாகவே வீழ்த்தப்படுகிறார்கள் என்றார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.