கடலில் அதிதீவிர சூப்பர் சூறாவளியாக மாறிய அம்பன்


புதுதில்லி:வங்கக் கடலில் உருவான புயல் தற்போது அதிதீவிர சூப்பர் சூறாவளியாக மாறியுள்ளது. இது புதன்கிழமை மாலைக்குள் மேற்கு வஹ்கத்தின் திகா கடற்கரை- வங்கதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பாதிப்புகள் அதிகம் இருக்கும் என கணக்கிடப்படுவதால், அதை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் நிலையில் உள்ளது. புயல் பாதிப்பு அதிகம் ஏற்பட கூடிய பகுதிகளான மேற்கு வங்காளம் மற்றும் ஒடிஸாவில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ராணுவம், விமானம், கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளைச் சேர்ந்த குழுக்களும், மாநில அரசுக்கு துணையாக செயல்பட தயார் நிலையில் உள்ளன.
இப்புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: கடந்த 1999-ஆம் ஆண்டுக்கு பின் வங்க கடலில் உருவாகியுள்ள அதிதீவிர சூப்பர் சூறாவளியாகும்.
கடலில் இதன் வேகம் மணிக்கு 200 முதல் 240 கி.மீட்டர் வரை இருக்கிறது. வடக்கு, வடமேற்கு திசை நோக்கி சூறாவளி பயணிகப்பதால், மேற்கு வங்காளத்தில், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட கூடும்.
கொல்கத்தா, ஹூக்ளி, ஹவுரா மற்றும் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் காற்று மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் வீசும். இது மணிக்கு 135 கி.மீட்டர் வரை வேகமெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.