ஓவியர் ரவி வர்மா பிறந்த நாள்
-கண்ணன் சேகர்
29.04.2020 – புதன் கிழமை 🟢இன்று…
📌1848ல் – ரவி வர்மா, இந்திய ஓவியர் பிறந்தநாள்.
📌1891ல் – பாரதிதாசன், தமிழகக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் பிறந்தநாள்.
📌பன்னாட்டு நடன நாள் . இந்திய, இலங்கை போன்ற நாடுகளில் நடனக்கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகும்.
சில சந்தர்ப்பங்களில் தெய்வீகத் தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகின்ற போதிலும் கூட உலக நடன தினம் (World Dance Day) என்ற அடிப்படையில் ஏனைய உலக தினங்களைப் போல இத்தினம் ஒரு முக்கியத்துவம் பெற்ற தினமாக அனுஷ்டிக்கப் படுவதில்லை. உலக நடன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது.
〰️〰️〰️💃🏼🙏🏻🙌🏿〰️〰️〰️
நடன தினத்தில் நம் நினைவுக்கு வந்த கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்
.
🎵
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
சுவாமி..
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன..
அழகர் மலை அழகா
இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன..
நவரசமும்
முகத்தில் நவரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசமும்
கண்டு
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார்..
பாவை என் பதம் காண நாணமா..
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
மாலவா வேலவா..
மாயவா சண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்..
மோகத்திலே என்னை மொழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல்..
மாலவா வேலவா மாயவா சண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
மானாட மலராட மதியாட நதியாட
மங்கை இவள் நடனமாட
வானாட மண்ணாட கொடியாட இடையாட
வஞ்சி இவள் கைகளாட..
சுவையோடு நானாட எனை நாடி இது வேளை
விரைவினில் துணையாக ஓடி வருவாய்
தூயனே மாலவா மாயனே வேலவா
எனையாளும் சண்முகா வா..
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
படம் : தில்லானா மோகனாம்பாள்
You must log in to post a comment.