ஓட்டுநர் சங்கம் போராட்டம்

மதுரை, ஜூலை,6: தமிழக அரசு அனைத்து ஓட்டுநர்களுக்கும் தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அனைத்து ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. போலீஸார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து அப்போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மதுரை மாட்டு தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து ஓட்டுநர் நலச்சங்க சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அப்போது அதன்
மாநிலச் செயலாளர் தங்கப்பாண்டி செய்தியாளர்களிடம் கூறியது:

கொரோனா தொற்றால் அனைவரும் தமிழகத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 4 மாதமாக ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் வாகனம் ஓட்ட முடியாமல் உள்ளனர். தமிழகம் முழுவதும் 56 ஆயிரம் பேர் வாகனங்களை இயக்க முடியாததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். ஆகையால் எங்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து ஓட்டுநர்களுக்கும் தனி நல வாரியம் அமைக்க வேண்டும எனக் கேட்டுக் கொண்டார்.

ஓட்டுநர்களின் போராட்டத்தை அறிந்த அண்ணா நகர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.