ஓசோன் படலத்தின் துளை மூடியது
விஞ்ஞானிகள் தகவல்
லண்டன்: பூமியை புற ஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய துளை தானாக மூடியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர் உள்ளிட்டவற்றை பூமிக்கு வராமல் தடுக்கும் இயற்கை அரணாக
ஓசோன் படலம் அமைந்துள்ளது. இது பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் அண்மை ஆண்டுகளில் அதிகரித்த போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் புகையால் கார்பன் மோனாக்சைடு போன்ற மாசுக்கள் ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. இதனால் இப்படலத்தில் பல இடங்களில் துளைகள் ஏற்பட்டன.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவியதால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தின.
இதனால் போக்குவரத்து வாகனங்கள் நின்றன. பெரிய தொழிற்சாலைகள் இயங்குவது தடைப்பட்டது. இதனால் காற்று மாசு குறையத் தொடங்கியது. இதன் பயனாக ஓசோன் படலத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என செயற்கைக்கோள் உதவியுடன் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக பூமியின் வடதுருவமான ஆர்ட்டிக் மேற்பகுதியில் ஓசோன் படலத்தில், ஒரு மில்லியன் சதுரகிலோ மீட்டர் அளவுக்கு உருவாகியிருந்த பெரிய துளை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ராட்ச துளை அதிசயப்படும் வகையில் மூடப்பட்டிருந்தது கண்டு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஐரோப்பிய மையத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை மற்றும் கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை ஆகியன இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும்
ஓசோனில் மிகப்பெரிய துளை ஏற்பட்டதும் அதுதாமாக மூடியதும் போலார் வோர்டெக்ஸ் எனப்படும் வாயு சுழற்சியே காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
You must log in to post a comment.