ஒரே மாதத்தில் ரஷ்ய நாட்டை புரட்டிப்போட்ட கொரோனா
மாஸ்கோ: கடந்த மாதம் வரை கொரோனா பாதிப்பை பெரிய அளவில் சந்திக்காத ரஷ்ய நாட்டில் இன்றைக்கு கொரோனா தொற்று அதிகரித்து அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்ய நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை எட்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,222. கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய சில வாரங்களிலேயே ஊரடங்கை ரஷியா பிறப்பித்துள்ளது. இதனால் அந்நாட்டில் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். கொரோனா உயிரிழப்பு செய்திகள் அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதால், தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பெருநகரங்களில் ஆள்நடமாட்டமே இல்லை. ரஷ்ய நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 11-ஆம் தேதி வரை உள்ளது.
You must log in to post a comment.