எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்த நாள்

சிறப்பு நாள்
ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள்
தொங்கா விடுதலை நாள்

1887 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பெ. வர​த​ரா​ஜுலு நாயுடு பிறந்த நாள்.
1946 – எஸ். பி. பாலசுப்ரமணியம், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் பிறந்த நாள்
1959 – இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி பிறந்த நாள்

பிற நிகழ்வுகள்
1561 – லண்டனின் பழைய புனித பவுல் பேராலயத்தின் கோபுரம் மின்னல் தாக்கியதில் சேதமடைந்தது. அதன் பின்னர் அதை சீர்படுத்தவேயில்லை.
1615 – ஜப்பானில் தொக்குகாவா லெயாசு தலைமையிலான படைகள் ஒசாக்கா கோட்டையைக் கைப்பற்றின.
1745 – ஆஸ்த்திரிய வாரிசுரிமைப் போரில் மகா பிரெடெரிக்கின் புருசியப் படைகள் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.
1760 – நியூ இங்கிலாந்து தோட்டக்காரர்கள் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் அக்காடியர்களால் கைப்பற்றப்பட்ட தமது நிலங்களை மீளக் கைப்பற்றுவதற்காக அங்கு வந்தடைந்தனர்.
1783 – மொண்ட்கோல்ஃபியர் சகோதரர்கள் தமது வெப்ப ஊதுபையை பொதுமக்கள் முன்னிலையில் பரிசோதித்தனர்.
1802 – சார்தீனியா மன்னர் நான்காம் சார்லசு இம்மானுவேல் தனது தம்பி விக்டர் இம்மானுவேலுக்காக முடி துறந்தார்.
1812 – லூசியானா அமெரிக்க மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, லூசியானா பிராந்தியம் மிசூரி பிராந்தியம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1859 – இத்தாலிய விடுதலைப் போரின்போது, மசெண்டா போரில் மூன்றாம் நெப்போலியன் தலைமையில் பிரெஞ்சு ராணுவம் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்தது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் பிலோ கோட்டையில் இருந்து பின்வாங்கின.
1876 – டிரான்ஸ்கான்டினென்டல் எக்ஸ்பிரஸ் என்ற தொடர்வண்டி நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோவை 83 மணி 39 நிமிஷங்களில் முதலாவது கண்டங்களிடையான தொடருந்துப் பாதை வழியே சென்றடைந்தது.
1878 – உதுமானியப் பேரரசு சைப்பிரசை ஐக்கிய ராச்சியத்துக்கு கொடுத்தது.
1887 – பெ. வர​த​ரா​ஜுலு நாயுடு பிறந்த நாள்.
1896 – ஹென்றி ஃபோர்ட் பெட்ரோலில் இயங்கும் தனது முதலாவது தானுந்தை வெற்றிகரமாக பரிசோதித்தார்.
1913 – பெண்கள் வாக்குரிமைப் போராளி எமிலி டேவிசன் குதிரைப்பந்தய மைதானத்தில் அத்துமீறி நுழைந்தபோது இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரையுடன் மோதுண்டு படுகாயம் அடைந்து, நான்கு நாள்களுக்கு பிறகு உயிரிழந்தார்.
1917 – முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன.
1919 – பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்ட மூலத்துக்கு அமெரிக்க சட்டமன்றம் அனுமதி அளித்தது.
1920 – பாரிசில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி ஹங்கேரி தனது 71 சதவீத நிலத்தையும், 63 சதவீத மக்களையும் இழந்தது.
1925 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ. வே. சு. ஐயர் மறைந்த நாள்.
1928 – சீனக் குடியரசின் அரசுத் தலைவர் சாங் சுவோலின் ஜப்பானியக் கையாள் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
1932 – சிலியில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில், சிலி சோசலிசக் குடியரசு நிறுவப்பட்டது. இது நான்கு மாதங்களில் கலைந்தது.
1939 – கியூபாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 963 யூத அகதிகளை ஏற்றிச் சென்ற செயின்ட் லூயிஸ் கப்பல் ஐக்கிய அமெரிக்காவால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு, ஐரோப்பாவை வந்தடைந்தது. இந்த அகதிகளில் 200 பேர் வரை பின்னர் ஜெர்மனியின் வதைமுகாம்களில் சிறைவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1940 – இரண்டாம் உலகப் போரின்போது பிரான்சின் டன்கிர்க் என்ற இடத்தில் இருந்த 338,000 பேர் கொண்ட பிரித்தானியப் படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டன.
1942 – இரண்டாம் உலகப் போரில் மிட்வே தீவுகள் மீது ஜப்பான் தாக்குதலைத் தொடங்கின.
1943 – அர்ஜென்டீனாவில் நிகழ்ந்த ராணுவப் புரட்சியில் ரமோன் கஸ்டீல்லோ பதவியிழந்தார்.
1944 – இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினர் ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் யூ-505-ஐ கைப்பற்றினர்.
1944 – இரண்டாம் உலகப் போரில் ரோம் நகரம் நேச அணிகளிடம் வீழ்ந்தது.
1946 – பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் பிறந்த நாள்.
1961 – அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கிழக்கு பெர்லினுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தாம் கிழக்கு ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்யப்போவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் வியன்னா மாநாட்டில் எச்சரித்தார்.
1967 – இங்கிலாந்தில் கனடிய விமானம் வீழ்ந்ததில் 72 பேர் உயிரிழந்தனர்.
1970 – தொங்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1979 – கானாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் ஜெனரல் ஆச்சியாம்பொங் பதவியிறக்கப்பட்டு ஜெரி ரோலிங்க்ஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
1989 – ரூகொல்லா கொமெய்னியின் இறப்பை அடுத்து ஈரானின் புதிய தலைவராக அலி கொமெய்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் ராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. பல மாணவர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1989 – போலந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சொலிடாரிட்டி இயக்கத்தின் வெற்றி கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்துக்கு எதிரான புரட்சியை முன்னெடுக்க உதவியது.
1989 – ருசியாவில் ஊஃபா என்ற இடத்தில் இரண்டு தொடருந்துகள் இயற்கை எரிவளிமக் குழாய் ஒன்றைக் கடக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 575 பேர் உயிரிழந்தனர்.
1996 – ஐரோப்பாவின் ஆரியான் 5 ஏவுகலம் ஏவப்பட்டு 37 வினாடிகளில் வெடித்துச் சிதறியது.
2001 – அரச மாளிகையில் சூன் 1 இல் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து ஞானேந்திரா நேபாளத்தின் மன்னராக முடி சூடினார்.
2010 – ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 முதலாவது ஏவுகலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
2015 – ஆக்ரா நகரில் எரிபொருள் நிலையம் ஒன்று வெடித்ததில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.