எழுத்தாளர் அகிலன் பிறந்த நாள்

1358 – துப்ரோவ்னிக் குடியரசு அமைக்கப்பட்டது.
1709 – ரஷ்யாவின் முதலாம் பியோத்தர் பொல்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சின் படைகளை வென்றார்.
1801 – கெய்ரோ நகரம் பிரித்தானியப் படையினரிடம் வீழ்ந்தது.
1806 – புவனஸ் அயரசை பிரித்தானியர் கைப்பற்றினர்.

1880 – ஹெலன் கெல்லர், அமெரிக்கப் பெண் எழுத்தாளர் பிறந்த நாள்
1896 – ஜப்பான், சன்ரிக்கு என்னுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 27,000 பேர் கொல்லப்பட்டனர்.

1922 – அகிலன், தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர் பிறந்த நாள்
1950 – கொரியப் போரில் பங்கு பெற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை அனுப்ப முடிவு செய்தது.
1954 – உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது.
1957 – லூசியானா, மற்றும் டெக்சாசில் நிகழ்ந்த சூறாவளியில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1967 – உலகின் முதலாவது ஏடிஎம் (ATM) லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது.
1974 – அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கு பயணம் மேற்கொண்டார்.
1977 – சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 – முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
1991 – சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.
1998 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.
2007 – டோனி பிளேர் பிரதமர் பதவியைத் துறந்ததை அடுத்து கோர்டன் பிரௌன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.