ஊர் கட்டிக் காத்ததை காற்றில் பறக்க விடலாமா-கமல் கேள்வி


சென்னை:
கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு நீடித்து வரும் சூழலில் மதுக்கடைகளை திறந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கூடி கட்டிக் காத்ததை காற்றில் பறக்க விடலாமா என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
இந்நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.