ஊரடங்கை நீட்டிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை
புதுதில்லி: நாட்டில் ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை இரவுடன் முடிவடையும் நிலையில், அதை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
நோய்த் தொற்றின் பரவல் வேகம் மெல்ல அதிகரித்து வரும் சூழலில் அதை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முனைப்பை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. இச்சூழலில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் ஊரடங்கை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
You must log in to post a comment.