ஊரடங்கு நீடிப்பு மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்:சோனியா காந்தி
புதுதில்லி: பொது ஊரடங்கை மேலும் நீட்டித்தால் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்தார்.
காணொலி காட்சி மூலம் கட்சியின் செயற்குழுவில் உரையாற்றிய அவர் கூறியது:
மத்திய அரசுக்கு இன்னும் தெளிவான யோசனை இல்லை. கொவைட்-19 தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசிடம் அளித்த காங்கிரஸ் கட்சியின் பரிந்துரைகள் ஓரளவு மட்டும் செயல்படுத்தப்படுகின்றன.
பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து, நான் பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். நமது ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை பிரதமரிடம் தெரிவித்திருந்தேன். கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களின் துன்பங்களைத் தணிக்க பல பரிந்துரைகளும் கொடுக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, பரிந்துரைகள் மோசமான முறையில் மட்டுமே செயல்படுத்தப்பட்டன.
நாட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளது. மே 3-ஆம் தேதிக்குப் பிறகும் பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மோசமான விளைவுக்கு வழிவகுக்கும் என்றார் அவர்.
You must log in to post a comment.