ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும்

முதல்வர் அறிவுறுத்தல்


சென்னை:நோய் பாதிப்பு பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மத்திய அரசு பிரித்துள்ளது. பச்சை பகுதிகளில் தொழில் தொடங்க அரசு படிப்படியாக அறிவிப்பை வெளியிடும். அரசின் ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியது:
சமூக நல கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. பிற மாநில தொழிலாளர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது.
நோய் பாதிப்பு பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மத்திய அரசு பிரித்துள்ளது. அனைத்து பகுதிகளையும் பச்சை மண்டலமாக மாற்றுவது மக்கள் கையில்தான் உள்ளது. கொரோனா தொற்று குறைந்தால் மட்டுமே தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
பச்சை பகுதிகளில் தொழில் தொடங்க அரசு படிப்படியாக அறிவிப்பை வெளியிடும். அரசின் ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தும்போது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 100 நாள் பணியின்போது, கூட்டம் சேராமல் சரியாக பிரித்து வேலை வழங்க வேண்டும். 58 வயதுக்கு மேற்பட்டோரை 100 நாள் வேலை வாய்ப்பில் ஈடுபடுத்த கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.