ஊரடங்கு குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஊரடங்கு குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் மே 3-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் பல மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையாததால் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு என்ன என்பதை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.