ஊரடங்கு உத்தரவு மீறல்: 2.71 லட்சம் பேர் கைது


சென்னை, ஏப்ரல் 22:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 2.71 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே 3-ஆம் தேதி வரை அமலில் உள்ள இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தேவையின்றி வாகனங்களில் சுற்றி வருவோரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 71 ஆயிரத்து 389 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளதாகவும், 2 லட்சத்து 55 ஆயிரத்து 538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.