ஊரடங்குகால தொழிற்சாலைகள் செயல்பாடு வழிமுறைகள் வெளியீடு

சென்னை:தமிழகத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் செயல்பட அனுமதி தேவையில்லை.
தொழிற்சாலைகள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டுமான பணிகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்
சென்னையில் பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட சுயமாக தொழில்புரியும் பணியாளர்கள் அனுமதி பெற http://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் அனுமதி பெறலாம்.
சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்படும் தொழிற்சாலைகளில் நாள்தோறும் இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகளை ஒவ்வொரு மணி நேரம்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். 200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர் இருக்க வேண்டும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.