ஊரடங்கில் தொடரும் தடைகள்!

புதுதில்லி: இந்தியா முழுவதும் மே 3 முதல் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மண்டலங்கள் வாரியாக நீடிக்கும் தடைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த் தொற்றின் பரவல் வேகத்தை வைத்து நாட்டில் உள்ள மாவட்டங்கள் பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த மண்டலங்களில் தொடரும் தடைகள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து மண்டலங்களிலும் விமானம், ரயில், மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையே சாலை போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள் திறக்க தடை நீடிக்கப்படுகிறது.
ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூட்டமாக திரளக் கூடாது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கத் தடை, ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் இயங்காது. சமூக, மத, அரசியல் ரீதியான கூட்டங்கள் நடத்த தடை நீட்டிக்கப்படுகிறது.
இரவு 7 முதல் காலை 7 மணி வரை தனி நபர் நடமாட்டம் முழுமையாக தடை செய்யப்படுகிறது.
உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் நடவடிக்கைகளை உள்ளூர் நிர்வாகங்கள் எடுக்கலாம்.
சிறுவர், சிறுமிகள், கர்ப்பிணிகள், 60 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
சிவப்பு மண்டலம் இல்லாத ஆரஞ்ச், கிரீன் மண்டலங்களில் மாநில அரசுகள் நிலைமைக்கு ஏற்ப சில முடிவுகளை எடுக்கவும் மத்திய அரசின் உள்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஆரஞ்சு மண்டலத்தில் கார்களில் ஓட்டுநர் தவிர இருவர் மட்டும் பின் இருக்கையில் அமர்ந்து செல்ல அனுமதி உண்டு.

பச்சை மண்டலங்களில் பேருந்துகளை 50 சதவீத பயணிகளுடன் தனிமனித இடைவெளி விட்டு பயணிக்க அனுமதி.

ஊரடங்கு காலத்தில் வேளாண் பணி, உற்பத்தி பணிகளுக்கு அனுமதி உண்டு.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.