ஊரகப் பகுதிகளில் இன்று முடிதிருத்தும் கடைகள் திறக்க அனுமதி


சென்னை: ஊரகப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் முடிதிருத்தும் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளதை அடுத்து முடிதிருத்துவோரின் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

இருப்பினும் சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் சலூன்களைத் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. தற்போதைய நிலையே தொடரும்.

ஊரகப் பகுதிகளில் கடைகளைத் திறந்திருக்கும்போது, பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முடி திருத்தும் நிலையங்களில் நாள்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

பணியாளர்கள் கையுறை அணிந்துதான் முடிதிருத்த வேண்டும். பணியாளரும், கடைக்கு வருவோரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.