உலக நட்பு தினம்
சிறப்பு நாள்
அனைத்து உயிரிடத்திலும் காணப்படுவது நட்பு. இந்த பூமியில் பிறக்கும் மனிதன் சுயமாக தேர்வு செய்வது நட்பை மட்டுமே. நட்பை பாராட்டி திருக்குறளி்ல் ஒரு தனி அதிகாரத்தை திருவள்ளுவர் இயற்றியுள்ளார். உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்ற குறள் மூலம் நட்புக்கு இலக்கணம் வகுத்தது நம் தமிழ் மொழி.
1985-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக நட்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம் தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் வாழ்த்து அட்டைகள், நட்புக் கை வளையம் போன்றவைகளை அளித்து நண்பர்கள் கொண்டாடி வந்தனர். இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
பிற நிகழ்வுகள்
1610 – ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது இன்றைய ஹட்சன் குடாவை சென்றடைந்தார்.
1790 – ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
1798 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.
1870 – உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
1903 – ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக மாசிடோனியர்களின் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது.
1914 – ஜெர்மானியப் படையினர் லட்சம் பேர் முற்றுகையிட்டன.
1916 – முதலாம் உலகப் போர்: லியனார்டோ டாவின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.
1918 – முதலாம் உலகப் போரை அடுத்து சைபீரியாவுக்கு தனது படைகளை அனுப்பப்போவதாக ஜப்பான் அறிவித்தது.
1931 – ராணுவ வேலைகளை நிராகரிக்குமாறு அறிவியலாளர்களுக்கு ஐன்ஸ்டைன் அழைப்பு விடுத்தார்.
1932 – பொசித்திரன் கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1934 – அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார்.
1939 – அணு ஆயுதத்தை தயாரிக்க அறிவுறுத்துமாறு ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டுக்கு கடிதம் எழுதினார்கள்.
1943 – போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாஜிகளுக்கு எதிராகக் கிளர்ச்சி இடம்பெற்றது.
1945 – இரண்டாம் உலகப் போர்: தோல்வியடைந்த ஜெர்மனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நட்பு அணி நாடுகளின் பொட்ஸ்டாம் மாநாடு நிறைவடைந்தது.
1989 – யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1990 – ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.
1994 – பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.
You must log in to post a comment.