உலக தாய்ப்பால் தினம்

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1  முதல் ஒருவார காலம் உலக தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்வின் அடித்தளமாக கருதப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பெற்றோரும் அறிய வேண்டும் என்ற நோக்குடன் உலகம் முழுவதும் ஐக்கிய நாடு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியா உள்பட 170 நாடுகளில் 1991 முதல் உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது.

சிறப்பு நாள்

உலக தாய்ப்பால் தினம்
உலக சாரணர் நாள்
அங்கோலா – ராணுவ நாள்
பெனின் – தேசிய நாள் (1960)
கொங்கோ – பெற்றோர் நாள்
லெபனான் – இராணுவ நாள்
சுவிட்சர்லாந்து – தேசிய நாள் (1291)

பிற நிகழ்வுகள்

கிமு 33 – ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தார்.
1291 – சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
1461 – நான்காம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார்.
1492 – ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர்.
1498 – கொலம்பஸ் வெனிசுலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
1619 – முதலாவது ஆப்பிரிக்க அடிமைகள் வெர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.
1774 – ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
1800 – பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.
1831 – புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
1876 – கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38-ஆவது மாநிலமாக ஏற்கப்பட்டது.
1894 – கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.
1902 – பனாமா கால்வாய்க்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.
1902 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1907 – சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிரௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.
1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.

1920 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் மறைந்தார்.

1927 – சீன உள்நாட்டுப் போரின் முக்கிய போர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.
1936 – பெர்லினில் 11-ஆவது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
1941 – முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.
1944 – போலந்தில் வார்சா நகரில் நாஜிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
1952 – தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
1960 – டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1960 – பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.
1964 – பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
1967 – கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.
1980 – அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
2004 – பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.

அமேசானி்ல் காத்திருக்கும் WOMEN SPECIAL

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.