உலக செஞ்சிலுவை நாள்|ஐரோப்பா – வெற்றி நாள்|தென் கொரியா – பெற்றோர் நாள்

|1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் 6-ஆம் ஹென்றி மன்னனுக்கு எதிராக ஜாக்கேட் என்பவர் தலைமையில் கிளர்ச்சி நடந்தது.
1821 – கிரேக்க விடுதலைப் போரில், துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கிரேக்கர்கள் தோற்கடித்தனர்.
1828 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் பிறந்த நாள்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைநகராக வெர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரம் தேர்வு செய்யப்பட்டது.
1886 – ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.
1902 – கரீபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் பலியாகினர்.
1914 – பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.
1916 – சுவாமி சின்மயானந்தா பிறந்த நாள்.
1933 – மகாத்மா காந்தி ஹரிஜன மக்களின் நலனுக்காக 21 நாள்கள் உண்ணாநோன்பு தொடங்கினார்.
1942 – இரண்டாம் உலகப் போரில் கொக்கோஸ் தீவுகளில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை இராணுவப் பிரிவை சேர்ந்தவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தன.
1984 – லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் புறக்கணிக்கப்போவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
2007 – புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.