உலக சுகாதார நிறுவனம் மீது டிரம்ப் கோபம்
வாஷிங்டன் :உலக சுகாதார நிறுவனத்துக்கு அளிக்கப்படும் நிதியை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணி்கை 12,837-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து பேசியது:
உலக சுகாதார நிறுவனம் அமெரிக்காவிடம் இருந்து ஏராளமான பணத்தை பெற்று வருகிறது. ஆனால் அது சீனாவை மையமாகக் கொண்டு செயல்படுவது போல் தோன்றுகிறது. கொரோனா பாதிப்பு பற்றி பதில் சொல்வதில் எந்த பலனும் இல்லை என டிரம்ப் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must log in to post a comment.