உலகில் கொரோனா பாதிப்பு 40 லட்சத்தைக் கடந்தது
வாஷிங்டன்: உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகவேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,10,694-ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 2,75,971-ஆக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சமாகும்.
தற்போது அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,21,707 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 78000 உள்ளது.
ஸ்பெயினில் 2,60,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 2,17,185 பேர், பிரிட்டனில் 1,87,859 பேர், பிரேசிலில் 1,45,892 பேர், சிங்கப்பூரில் 21,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
You must log in to post a comment.