உலகம் பட்டினியை எதிர்நோக்கும் ஆபத்து
ஐ.நா. எச்சரிக்கை
நியூயார்க்:கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அடுத்து உலக மக்களை பசியால் வாடச் செய்யும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக உணவு திட்ட நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி பேசும்போது, கொரோனாவை இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 265 மில்லியன் மக்கள் பசியால் வாடும் நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஐ.நா.வின் மனிதாபிமான தலைவர் மார்க் லோகாக் பேசும்போது, கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது., தொற்றுநோய் 3 முதல் 6 மாதங்களுக்கு உலகின் ஏழ்மையான நாடுகளை எட்டும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
ஏழை நாடுகளில் வருமானம் இல்லை. வேலையில்லை.உணவுபொருள் உற்பத்தியில்லை. வரும் காலத்தில் பசியையும், பட்டினியையும் சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது என எச்சரித்துள்ளது ஐ.நா.
You must log in to post a comment.