உலகத் தொலைத் தகவல் தொடர்பு நாள்

இன்று நார்வே – அரசியல் நிர்ணய நாள்

உலகத் தொலைத் தகவல் தொடர்பு நாள்

ஓர் இடத்திலிருந்து தொலைவில் இருக்கும் மற்றொரு இடத்தோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தும் அமைப்பு என்பதுதான். இரண்டு இடங்களை இணைத்து, அங்குள்ளவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளிப்படுத்தும் வழிமுறை மற்றும் அதற்கான கருவிகளுக்குத் தகவல் தொடர்பு என்ற தொழில்நுட்பச் சொல்லை நாம் பயன்படுத்துகின்றோம்

பிற நிகழ்வுகள்…
1498 – வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
1521 – பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை சீமானான (Duke) எட்வேர்ட் ஸ்டாஃபேர்ட் தூக்கிலிடப்பட்டான்.
1590 – டென்மார்க்கின் ஆன் ஸ்காட்லாந்து அரசியாக முடி சூடினாள்.
1792 – நியூயார்க் பங்குச் சந்தை தொடங்கப்பட்டது.
1809 – பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான்.
1814 – நார்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.
1846 – அடால்ஃப் சாக்ஸ் என்பவரால் சாக்சபோன் வடிவமைக்கப்பட்டது.
1865 – அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத் தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1915 – பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.
1940 – இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரைக் கைப்பற்றியது.
1969 – சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ் கோளின் வளிமண்டலத்துள் சென்று வீனசில் மோதும் முன்பு வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
1974 – அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
1983 – லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் போடப்பட்டது.
1998 – தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2009 – தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.