உற்பத்தியைத் தொடங்கியது ஹூண்டாய் நிறுவனம்


சென்னை: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ஆலையில் மீண்டும் கார்கள் உற்பத்தி தொடங்கியுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கார் தொழிற்சாலைகளும் உற்பத்திப் பணிகளை நிறுத்தின.
தற்போது ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் தளர்த்தியுள்ளன. இதையடுத்து ஆலைப் பணிகளில் ஒருசில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி ஹூண்டாய் நிறுவனம், நாடு முழுவதும் 255 விற்பனையகங்களில் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. அவ்வகையில் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ஆலையில் மீண்டும் கார்கள் உற்பத்தி தொடங்கியுள்ளது. முதலில் நாளில் 200 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.