உயிரிழந்தோர் உடல் அடக்கத்தை தடுப்போர் மீது கடும் நடவடிக்கை

தமிழக அரசு எச்சரிக்கை


சென்னை: கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோர் உடலை அடக்கம் செய்வதை தடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு விடுத்துள்ள எச்சரிக்கை விவரம்: கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தோர் உடல் கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும். அதை தடுக்க முயற்சிப்பது கடும் குற்றமாகும்.
இறந்தவர் உடலை தகனம் அல்லது அடக்கம் செய்வதைத் தடுத்தால் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளை வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.