ஈஃபெல் டவர் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்ட நாள்

இன்று அதே நாளில்

1527 – ஸ்பானிய, மற்றும் ஜெர்மனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். 147 சுவீடன் படைகள் புனித ரோமப் பேரரசின் மன்னன் 5-ஆம் சார்ல்சுக்கு எதிராகப் போரிட்டு இறந்தனர்.
1542 – பிரான்சிஸ் சேவியர் கோவாவை அடைந்தார்.
1682 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் தனது கோட்டையை வேர்சாய் நகருக்கு மாற்றினான்.
1757 – பிரடெரிக் தலைமையிலான புரூசியப் படைகள் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்து பிராக் நகரை முற்றுகையிட்டனர்.
1840 – பென்னி பிளாக் அஞ்சல்தலை ஐக்கிய ராஜ்ஜியத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
1854 – இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.
1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் 34-ஆவது ராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8-இல் தூக்கிலிடப்பட்டான்.
1860 – கரிபால்டி தனது தொண்டர் படைகளுடன் இரண்டு சிசிலிகளின் பேரரசைக் கைப்பற்றுவதற்காக ஜெனோவாவில் இருந்து புறப்பட்டான்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது.


1889 – ஈபெல் கோபுரம் பாரிஸில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது. 1887 முதல் 1889 வரையிலான காலத்தில் இந்த ஈபெல் கோபுரம் கட்டப்பட்டது. பிரெஞ்சு புரட்சியின் நூற்றாண்டு விழாவின் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக எக்ஸ்பொசிஷன் யூனிவல்செல் என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்காக நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது.

300 உருக்கு தொழிலாளர்களைக் கொண்டு 5 லட்சம் ஆணிகள், 18,038 உருக்குத் துண்டுகளால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. கட்டுமானப் பணியின்போது ஒரு தொழிலாளி மட்டும் இறக்க நேர்ந்தது.

1930 – ஈரானில் நிலநடுக்கத்தில் 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
1937 – ஜெர்மனியின் ஹின்டென்பேர்க் என்ற வான்கப்பல் (zeppelin) நியூ ஜெர்சியில் தீப்பிடித்து அழிந்தது.
1942 – இரண்டாம் உலகப் போரில் பிலிப்பைன்ஸில் நிலைகொண்டிருந்த கடைசி அமெரிக்கப் படை ஜப்பானிடம் சரணடைந்தன.
1945 – இரண்டாம் உலகப் போர், கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராக் நகரில் தொடங்கியது.
1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார்.
1976 – இத்தாலியின் ஃபிரியூல் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 989 பேர் கொல்லப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.