இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இன்று முதல் தளர்வு

கொழும்பு: இலங்கையில் கொரோனா அச்சுறுத்தலால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருசில பிரதேசங்கள் வெள்ளிக்கிழமை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு – 12-இல் பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல பிரதேசத்தில் உள்ள சுதுவெல்ல ஆகிய பகுதிகள் திறக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த இரு பகுதிகளிலும் கடந்த வாரங்களில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவை தனிமைப்படுத்தப்பட்டன. அங்குள்ள மக்கள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் பலர் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவு செய்ததை அடுத்து அவர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து இரு பகுதிகளும் வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து இலங்கையில் எப்பகுதியும் தற்போது தனிமைப்படுத்தலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.