இருப்புப் பாதையில் படுத்துறங்கிய தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதல்-16 பேர் பலி


மும்பை: மகாராஷ்டிர மாநிலம், ஹௌரங்காபாத்தில் இருப்புப் பாதையில் படுத்துறங்கிய தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை மோதியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. இந்நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்கு சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல இடங்களில் இருந்து மீண்டும் ஊர் திரும்ப முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால் பலர் நடந்தே ஊர் திரும்பவும் முயற்சிக்கின்றனர்.
அப்படி நடந்து செல்வோரில் பலர் சாலையோரங்களிலும், ரயில்வே இருப்புப் பாதைகளிலும் உறங்குகின்றனர் (சரக்கு ரயில் இயக்கப்படுவது தொடர்பான விழிப்புணர்வு இன்மை காரணமாக).
இந்நிலையில், ஹைரங்கபாத்தில் உள்ள இருப்புப் பாதையில் கர்மாட் என்ற பகுதியில், ரயில் அந்த வழியாக வராது என்ற எண்ணத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுத்துறங்கியுள்ளனர். அப்போது சரக்கு ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வேகமாக அவர்கள் மீது ஏறி கடந்து சென்றுள்ளது. இதில் சம்பவ இடத்தில் 16 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இச்சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவியை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவித்தார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.