இம்மாதம் இறுதி வரை ரயில், விமானப் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


சென்னை: மே மாதம் இறுதி வரை ரயில், விமானப் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என அனைத்து மாநில முதல்வர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு 5-ஆவது முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இதில் தமிழகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், மருந்து, பாதுகாப்பு உபகரணங்களுக்காக தற்காலிக நிதியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும். மே 31-ஆம் தேதி வரை சென்னைக்கு ரயில், விமான சேவைகளை தொடங்க வேண்டாம். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் கூடுதல் தானியங்களை இலவசமாக தர வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.