இன்று விளக்கேற்றும் நிகழ்வு
நடைமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
புதுதில்லி. ஏப்ரல் 5: இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பின்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு இல்லங்களில் உள்ள அனைத்து விளக்குகளை மட்டும் அணைத்துவிட்டு விளக்கேற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு ஏற்கெனவே விடுத்த அழைப்பில், அவரவர் இல்லங்களில் இருந்தபடி அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, வாசல்படியில் இருந்தோ, பால்கனியில் இருந்தோ எரியும் மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட், செல்போனில் உள்ள டார்ச் ஆகியவற்றை ஏந்தி 9 நிமிடம் நிற்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கான நடைமுறையை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நிகழ்வின்பொழுது, மருத்துவமனைகள், பேருந்து நிலையங்களில் கட்டாயம் மின்விளக்குகள் எரியவேண்டும். தெரு விளக்குகளும் ஒளிர வேண்டும்.
தொலைக்காட்சி பெட்டி, குளிர் சாதனப்பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களை அணைக்க தேவையில்லை என மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டால் மின்தடை ஏற்பட்டு மின்உற்பத்தி, மின்பகிர்மான சாதனங்கள், மின்பொருள்களில் பழுது ஏற்படும் என்ற தகவல் பரவியது. அது தவறானது என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இதற்கான நடைமுறையை அரசு வெளியிட்டுள்ளது.
You must log in to post a comment.