இன்று தொழிலாளர் தினம்

01.05.2020 – வெள்ளிக்கிழமை –  🟢இன்றைய தினத்தில்..

-கண்ணன்சேகர்

📌1840ல் – உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.

📌1844ல் – ஆசியாவின் 
முதலாவது நவீன காவல்துறை ஹொங்கொங் நகரில் அமைக்கப்பட்டது.

📌1956 ல்– யோனாசு சால்க்கினால் 
தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி பொது மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

📌மே தினம் மற்றும் தொழிலாளர்கள் தினம்.

ஆண்டுதோறும் உலக தொழிலாளர் அமைப்பு சார்பில் மே 1-ஆம் தேதி உலக தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
சமூகத்தில் தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டும்
வகையில், அவர்களை கவுரவிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம் என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
இந்தியா உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினத்தில் விடுமுறை அளிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றம் சிறப்பு நிகழ்ச்சிகளை இம்மாதம் முழுவதும் நடத்துகின்றன.
19-ஆம் நூற்றாண்டில் வளர்ந்த நாடுகளில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் கட்டாய வேலை இருந்தது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்தியாவில் 1923 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

உழைப்பை மூலதனமாக்கக் கொண்டு வாழ்க்கையில் போராடி வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துகள்.

தொழிலாளர்கள் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று.
🎵
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே..

வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே..

ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான்

அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்

மற்றும் ஒருவன் 
மண்ணிலிருந்து பொன்னை தேடினான்..

நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்

இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்..

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே..

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணுகின்றது 
எங்கள் நெஞ்சமே..

எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே..

கல்லில் வீடு கட்டித்தந்தது எங்கள் கைகளே

கருணை தீபம் ஏற்றி வைத்தது எங்கள் நெஞ்சமே

இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே..

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

படம்: பணக்கார குடும்பம்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.