இன்று தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை மேலும் 104 பேருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 162-ஆக உயர்ந்துள்ளது.
புதன்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 94 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து சென்னையில் கொரொனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 767-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,210 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
You must log in to post a comment.