இன்று சர்வதேச குடும்ப தினம்

-கண்ணன்சேகர்

சர்வதேச குடும்ப தினம்
பராகுவே – விடுதலை நாள்
மெக்சிகோ – ஆசிரியர் நாள்
தென் கொரியா – ஆசிரியர் நாள்

1859 – நோபெல் பரிசு பெற்ற பியேர் கியூரி, பிரெஞ்சு இயற்பியலாளர் பிறந்த நாள்.

தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். டி. கே. இராமமூர்த்தி பிறந்தநாள்-1922.

இவரும் எம். எஸ். விஸ்வநாதன்  இணைந்து விஸ்வநாதன் – இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால் படமாகும். 19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:
டி.கே.ஆர் தனியாக இசையமைத்தப் படங்கள்

👉🏻சாது
மிரண் டால்
👉🏻தேன் மழை
👉🏻மறக்க முடியுமா
👉🏻நான்
👉🏻மூன்றெழுத்து
👉🏻தங்கச் சுரங்கம்
👉🏻காதல் ஜோதி
👉🏻ஆலயம்
👉🏻சோப்பு சீப்பு கண்ணாடி
👉🏻சங்கமம்
👉🏻சக்தி லீலை
👉🏻அவளுக்கு ஆயிரம் கண்கள்.

பிற நிகழ்வுகள்

1525 – ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது.
1618 – ஜொஹான்னெஸ் கெப்லர் முன்னர் மார்ச் 8-இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.
1718 – உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.
1756 – இங்கிலாந்து பிரான்சின் மீது போரை அறிவித்ததில் ஏழாண்டுப் போர் தொடங்கியது.
1792 – பிரான்ஸ் சார்டீனியப் பேரரசு மீது போரை அறிவித்தது.
1796 – நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றின.
1851 – நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
1860 – கரிபால்டியின் படைகள் சிசிலியின் நேப்பில்ஸ் நகரைக் கைப்பற்றின.
1897 – கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.
1915 – இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஷவ்கத் அலியும், முகம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
1918 – பின்லாந்து உள்நாட்டுப் போர் முடிவுற்றது.
1919 – துருக்கியின் இஸ்மீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர்.
1929 – ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
1932 – ஜப்பானியப் படையினர் ஷங்காயை விட்டுப் புறப்பட்டனர்.
1932 – ஜப்பானின் பிரதமர் இனூக்காய் த்சுயோஷி அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்டார்.
1940 – இரண்டாம் உலகப் போரில் பெரும் போருக்குப் பின்னர் டச்சுப் படைகள் நாசி ஜெர்மன் படைகளிடம் சரணடைந்தன.
1940 – மக்டொனால்ட்ஸ் தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் தொடங்கியது.
1948 – இஸ்ரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவுதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை தொடங்கின.
1955 – உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.
1957 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.
1958 – சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.
1960 – சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.
1963 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார்.
1972 – 1945 ஐக்கிய அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஓக்கினாவா தீவு மீண்டும் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.
1978 – டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது.
1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
1988 – எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கினர்.
1991 – ஈடித் கிரெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.