இன்று கண்ணதாசன் பிறந்த நாள்

முந்தைய தலைமுறை முதல் இன்றைய தலைமுறை வரை கண்ணதாசனின் பெயரை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழ் மக்களின் எண்ணத்தில் தனது கவிதைகள் மூலம் ஆழமாக வேரூன்றியவர்.

கண்ணதாசன் 1927 ஜூன் 24-இல் பிறந்தார். கவிஞராக உருவெடுத்த அவர் தான் உயிரோடு இருக்கும் வரை தமிழ்த் திரைப்பட உலகில் கொடிக்கட்டி பிறந்தார். சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள், புதினங்கள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரைஒலி, தென்றல, தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்துள்ளார்.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். பல லட்சம் தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் குடியேறியவர் கண்ணதாசன். அவர் கடந்த 1981 அக்டோபர் 17-இல் காலமானார்.

பிற நிகழ்வுகள்

1314 – ஸ்காட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தன. ஸ்காட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.
1340 – நூறாண்டு போர்: மூன்றாம் எட்வர்ட் தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர்.
1509 – எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.
1571 – மணிலா நகரம் அமைக்கப்பட்டது.
1597 – டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் முதலாவது தொகுதியினர் ஜாவாவின் பாண்டாம் நகரை அடைந்தனர்.
1662 – மக்காவு நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் டச்சு நாட்டவர் தோல்வி கண்டனர்.
1664 – நியூ ஜெர்சியில் குடியேற்றம் தொடங்கியது.
1812 – ரஷ்யாவினுள் ஊடுருவும் முயற்சியில் நெப்போலியன் போனபார்ட்டின் படைகள் நேமன் ஆற்றைக் கடந்தன.
1849 – அமெரிக்கப் பெண்மணியான எலிசபெத் பிளாக்வெல் என்பவரே அமெரிக்காவில் முதன் முதலாக மருத்தவப் பட்டம் பெற்ற பெண்மணியாவார். அவர் இப்பட்டத்தினை 1849 ஆம் ஆண்டு பெற்றார்.
1859 – சார்டீனிய இராச்சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.
1860 – புளோரன்ஸ் நைட்டிங்கேலின் எண்ணத்தின்படி முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
1894 – பிரெஞ்சு அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.
1932 – சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.
1938 – 450 மெட்ரிக் டன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.
1940 – பிரான்சும் இத்தாலியும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியரை வெற்றி கொண்ட சோவியத் படைகளின் வெற்றி அணிவகுப்பு மாஸ்கோவில் இடம்பெற்றது.
1948 – சோவியத் ஒன்றியம் ஜெர்மனியின் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுகள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
1956 – சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
1975 – அமெரிக்க விமானம் நியூயார்க்கில் வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
1981 – 17 ஆண்டுகளாக உலகின் மிக நீளமான தொங்கு பாலமாக இருந்த ஹம்பர் பாலம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
1983 – அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீராங்கனை சாலி ரைட் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பினார்.
2002 – தான்சானியாவில் இடம்பெற்ற பெரும் ரயில் விபத்தில் 281 பேர் கொல்லப்பட்டனர்.
2004 – நியூயார்க்கில் மரண தண்டனை சட்டபூர்வமற்றதாக மாற்றப்பட்டது.
2007 – கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.