இன்று உலக செவிலியர் நாள்
1689 – பிரான்ஸுடன் போரிட இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் ஒக்ஸ்பேர்க் கூட்டணியில் இணைந்தான்.
1780 – அமெரிக்க புரட்சிப் போரில் தென் கரோலினாவின் சார்ல்ஸ்டன் நகரம் பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.
1797 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனிஸ் நகரைக் கைப்பற்றினான்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் வெர்ஜீனியாவில் ஸ்பொட்சில்வேனியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஆயிரக்கணக்கான கூட்டமைப்பு மற்றும் கூட்டணி படையினர் இறந்தனர்.
1881 – வட ஆப்பிரிக்காவில் துனீசியா பிரான்ஸின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
1922 – 20 தொன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது.
1937 – ஆறாம் ஜார்ஜ் மன்னன் பிரித்தானியாவின் மன்னனாக முடி சூடினான்.
1942 – 1,500 யூதர்கள் போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் வைத்துக் கொல்லப்பட்டனர்.
1949 – சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.
1952 – காஜ் சிங்க் ஜோத்பூரின் மன்னனாக முடி சூடினான்.
1965 – சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.
1978 – சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
1981 – ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பிரான்சிஸ் ஹியூஸ் சிறையில் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.
1982 – போர்ச்சுக்கலில் திருத்தந்தை இரண்டாவது ஜான பாலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
You must log in to post a comment.