இன்று உலக இசை தினம்

சிறப்பு நாள்

உலக இசை தினம்

இசை மனிதனோடு வாழ்வியலில் இணைந்த ஒன்று என்பதை உணர்ந்த ஃபிரெஞ்ச் அரசியல்வாதி ஜாக் லாங் மற்றும் இசையமைப்பாளர் மௌரிக் ஃபிளியூரெட் ஆகியோர் இசையின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துகொள்ள இந்நாளை உருவாக்கினர்.

அதைத் தொடர்ந்து பாரிசில் 1982-ஆம் ஆண்டு  முதல் இசை நாள் கொண்டாடுவது தொடங்கப்பட்டது.

உற்சாகம் தரும் இசை- இசையைக் கேட்பதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடையும். இதனால் மூளையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்ற ஹார்மோன் சுரக்கும்.  இதனால்தான் இசையைக் கேட்கும்போது இனம்புரியாத மகிழ்ச்சி உணர்வும், அமைதியான மனநிலையையும் நம்மால் அனுபவிக்க முடிகிறது.

மெல்லிய இசையைத் தொடர்ந்து கேட்பதன் மூலம் மனஅழுத்தம் காரணமாக சுரக்கக் கூடிய கோர்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோன் சுரப்பது குறைவதும் ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. இசையைக் கேட்போருக்கு வழக்கமாக ஏற்படும் பதற்றம் குறைகிறது. இவை எல்லாவற்றையும் விட பிறப்பு முதல் இறப்பு வரை இசைதான் மனிதனின் வாழ்வோடு இணைந்து பயணிக்கிறது.

பிற நிகழ்வுகள்


கனடா – தேசிய பழங்குடிகள் நாள்
கிறீன்லாந்து – தேசிய நாள்
பன்னாட்டு யோகா நாள்

1621 – பிராக் நகரில் 27 உயர்குடி செக் இனத்தவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1734 – கியூபெக் மாண்ட்ரியால் நகரில் மரீ-ஜோசெப் அஞ்சலிக் என்ற கறுப்பின அடிமைப்பெண், அவரது எஜமானரின் னின் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தியமைக்காக குற்றம் சாட்டப்பட்டு மக்கள் மத்தியில் சித்திரவதை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9-ஆவது மாநிலமாக இணைந்தது.
1798 – ஐரியத் தீவிரவாதிகளின் எழுச்சி பிரித்தானியாவினால் முறியடிக்கப்பட்டது.
1898 – குவாம் தீவை ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் டொப்ரூக் நகரம் இத்தாலி, மற்றும் ஜெர்மனியப் படைகளிடம் வீழ்ந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுற்றது.
1970 – பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கோப்பை வென்றது.
2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.
2006 – புளூட்டோ புதிதாகக் கண்டுபிடித்த துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.