இனி மீன்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்

அமைச்சர் ஜெயக்குமார் தகவல்


சென்னை: சென்னையில் செயலி மூலம் ஆர்டர் செய்தால் மீன்கள் வீட்டுக்கே அனுப்பப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் கூறியது-www.meengal.com என்ற மீன்கள் செயலியில் ஆர்டர் செய்தால் குறிப்பிட்ட முகவரிக்கு மீன்கள் வரும். முதல்கட்டமாக சென்னையில் சாந்தோம், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் காலை 6.30 முதல் 12.30 வரை மீன்களை செயலி மூலம் ஆர்டர் செய்தால் அனுப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி விரைவில் பிற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்றார் அவர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.