இனி இந்தியாவில் கொரோனா மெல்லச் சாகும்!


புதுதில்லி: இந்தியாவில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரு வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மெல்ல குறைவதோடு, குணமடைவோர் எண்ணிக்கையும் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கொரோனா நோய்த்தொற்று உலகில் பரவத் தொடங்கி அதன் உச்சத்தை தற்போது அடைந்துள்ள நிலையில், உலக அளவில் பல இடங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவும் வேகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


அவ்வகையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகமும், குளோபல் சேஞ்ச் டேட்டா லேப் ஆகியன இணைந்து சர்வதேச அளவில் கொரோனா நோய்த் தொற்று பரவல் வேகம், குணமடைவோர் எண்ணிக்கை போன்ற தகவல்களைத் திரட்டு ஆய்வு நடத்தி வருகிறது.
இந்தியா தொடக்க காலத்திலேயே கொஞ்சம் கூட தயக்கம் இன்றி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய காரணத்தால் நோய்த் தொற்றின் வேகம் பிற நாடுகளைக் காட்டிலும் மிகக் குறைவாக காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் குணடைவோர் எண்ணிக்கை கடந்த இரு மாதங்களில் மெல்ல அதிகரித்து வருகிறது. தொற்று பரவும் வேகமும் குறையத் தொடங்கியுள்ளது.
இதன் வரும் வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

வரும் வாரங்களில் ஊரடங்கு உத்தரவில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இருப்பினும் நீண்டநாள்களாக ஊரடங்கால் அவதிப்பட்டு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு புறப்படத் தொடங்கியுள்ள சூழலில் அவர்களால் நோய்த் தொற்று பிற இடங்களில் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக கவனமாக மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை ஒப்பிடும்போது, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், கனடா, துருக்கி மற்றும் அமெரிக்காவில் அதிகளவிலான மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் தற்போதைய நிலையில், 32 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. இதில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழப்போர் சதவீதம் மிகக் குறைவாகவே உள்ளது.
இனி வரும் வாரங்களில் குணமடைவோர் எண்ணிக்கை ஏறுமுகத்திலும், நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை இறங்கு முகத்திலும் இருக்கும் என்பதால் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.
இருப்பினும் உலக அளவிலான தொடர்புகள் இவ்வாண்டு செப்டம்பர் வரை சாத்தியமாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
அதற்குள் கொரோனா நோய்த் தடுப்பு மருந்துகள் தயாராகிவிடும் என்பதும் மருத்துவ உலகின் நம்பிக்கையாக உள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.