இந்திய சுதந்திர தினம் இன்று

சிறப்பு நாள்

தென் கொரியா – விடுதலை நாள் (1948)
காங்கோ – விடுதலை நாள் (1960)

பிற நிகழ்வுகள்

1040 – ஸ்காட்லாந்தின் மன்னர் முதலாம் டங்கன் மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டார்.
1057 – ஸ்காட்லாந்தின் மன்னர் மக்பெத் மூன்றாம் மால்க்கமுடனான போரில் கொல்லப்பட்டார்.

1872 – ஆன்மிகவாதி அரவிந்தர் பிறப்பு
1915 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
1920 – வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து ராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் சரணடைந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: கொரியா விடுதலை பெற்றது.
1947 – முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவியேற்றார்.
1947 – இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று பொதுநலவாய அமைப்பின் கீழ் தனி நாடானது. ஜவகர்லால் நேரு முதலாவது பிரதமரானார்.
1948 – தென் கொரியா உருவாக்கப்பட்டது.
1950 – அஸ்ஸாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் பலி, 5,000,000 பேர் வீடிழந்தனர்.
1960 – காங்கோ குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1973 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா கம்போடியா மீதான குண்டுவீச்சை நிறுத்தியது.
1975 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.
1977 – இலங்கையில் தமிழருக்கெதிரான இனப்படுகொலை நடவடிக்கையான ஆவணிப் படுகொலையில் 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு 10,000 பேர் வரை காயமடைந்தனர்.
1984 – துருக்கியில் குர்து மக்கள், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, ராணுவத்திற்கெதிராக கொரில்லா போரை தொடங்கினர்.
2005 – இந்தோனேசிய அரசுக்கும் ஆச்சே விடுதலை இயக்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹெல்சிங்கியில் கையெழுத்தானது.
2007 – பெருவில் இடம்பெற்ற 8.0 அளவு நிலநடுக்கத்தில் 514 பேர் கொல்லப்பட்டனர்.



Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.