இந்திய கிரிக்கெட் வீரர்கள் பற்றி இன்சமாம்-உல்-ஹக் விமர்சனம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வீரர் 30-40 ரன்கள் எடுத்தால் அது அணிக்காக இருக்கும். ஆனால் இந்திய வீரர் எடுக்கும் ரன்கள் அணிக்காக இல்லை, அவர்களுக்காகவே விளையாடுவார்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் கூறியுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்காக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
நான் விளையாடும்போது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம்என்னவெனில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இடத்தைப் பாதுகாக்க விளையாடுவர். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் அணிக்காக விளையாடுவர். இம்ரான்கான் தலைமையில் விளையாடும்போது வீரர்கள் தொடர் அடிப்படையில்தான் சிந்திப்பர். மோசமான தொடருக்கு பிறகு இம்ரான்கான் ஒருபோதும் வீரர்களை கைவிட மாட்டார்.
எங்கள் காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் சாதனையில் இந்திய வீரர்களைக் காட்டிலும் எங்கள் சாதனை சிறந்தது அல்ல. ஆனால் பாகிஸ்தான் வீரர் 30-40 ரன்கள் எடுத்தால் அது அணிக்காக இருக்கும். ஆனால் இந்திய வீரர் எடுக்கும் ரன்கள் அணிக்காக இல்லை, அவர்களுக்காகவே விளையாடுவார்கள். இதுதான் அவர்களுக்கும், எங்களுக்குமான வித்தியாசம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்திய வீரர்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ் மட்டுமே இருப்பதாக நினைக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார் இன்சமாம்.
You must log in to post a comment.